Advertisement

Responsive Advertisement

மக்களுக்கு மற்றுமொரு பேரிடி! அதிகரிக்கப்பட்ட எரிவாயு கொள்கலன் விலை

 


லாஃப் சமையல் எரிவாயு கொள்கலனின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லாஃப் சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்று 4,199 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 1,680 ரூபாவாகவும் மற்றும் 2 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 672 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண கருத்துத் தெரிவிக்கையில், 

விலை கட்டுப்பாடு இல்லாமையினால், எரிவாயு நிறுவனங்கள் விலை அதிகரிப்பை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

டொலர் பெறுமதி அதிகரிப்பு மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு எரிவாயு கொள்கலனின் விலைகள் அதிகரிக்கப்படலாம்.

விலை அதிகரிப்பு தொடர்பில் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுக்கு அறிவிக்க வேண்டியது அவசியம் கிடையாது.

அசாதாரண விலை அதிகரிப்பாயின் மாத்திரமே அமைச்சு தலையிடும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

Post a Comment

0 Comments