Advertisement

Responsive Advertisement

குறைந்த விலையில் வீடு வழங்கும் திட்டமொன்றினை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.


 (அஸ்ஹர் இப்றாஹிம்)


 வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து பகுதியிலும் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீடுகளில் வசிப்போருக்கு குறைந்த விலையில் வீடு வழங்கும் திட்டமொன்றினை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடு வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டத்திள் அடிப்படையில் பயணாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை 6,50,000 ரூபாவாக அதிகரிக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதற்கமைய நடுத்தர வருமானம் ஈட்டுவோருக்கு மலிவு விலையில் வீட்டுத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை இணங்கியுள்ளது.

இத்திட்டத்திற்காக தெரிவு செய்யப்படுபவர்களுக்கு முற்கொடுப்பனவாக 5,00,000 ரூபா செலுத்தக்கூடிய வசதி இருக்க வேண்டும்..வீட்டின் பெறுமதிக்கேற்ப மேலதிக பணத்தை வருடத்திற்குள் தவணை முறையில் அறவிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அவசியமானவர்களுக்கு வங்கிகள் மூலம் பணம் பெற்றுக் கொடுப்பதற்கும் வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளது.
இதன் மூலம் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான றணபொக்குணகம காணியில் 72 வீட்டுத் தொகுதிகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments