( அஸ்ஹர் இப்றாஹிம் )
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக மழை பெய்வதால் மாவட்டங்களின் கரையோரப் பிரதேசங்களில் கடற்கொந்தளிப்பு காரணமாக கரைவலை மற்றும் ஆழ்கடல் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லாத காரணத்தினால் கடல்மீனுக்கு பலத்த தட்டுப்பாடு நிலவுவதுடன் கிடைக்கும் கடல்மீன்கள் கூடுதலான விலைக்கும் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றது.
இதே வேளை ஆறு , குளம் மற்றும் வாவிகளில் பிடிக்கப்படும் ஆற்று மீனுக்கு கடும் கிராக்கி நிலவுவதுடன் விரால் , செப்பலி , கோல்டன் , கெளுத்தி , சுங்கான் , பனையான் , இறால் மற்றும் மணலை போன்ற மீன்வகைகள் முன்னரை விட இரண்டு மடங்கு கூடிய விலைக்கு விற்கப்படுகின்றன.
கடல்மீன் தட்டுப்பாட்டால் ஆற்றுமீன் சாப்பிடாதவர்கள் கூட ஆற்று மீன்களை வாங்கிச் செல்கின்றனர்.
இதே வேளை அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் மாட்டிறைச்சி 1.400 ரூபாய்க்கும் , கோழியிறைச்சி 800 முதல் 900 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது
0 Comments