Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

எம்.பி.க்கள்-அமைச்சர்கள் குழு இலங்கையை விட்டு வெளியேற முயற்சி?

 


நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடி மற்றும் பல்வேறு காரணங்களுக்காக அரசாங்கத்தின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நாட்டை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


சில காரணங்களால் சிலர் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க மூன்று மாத கால விஜயத்தை மேற்கொண்டு ஜப்பானுக்குச் சென்றுள்ளதுடன், வீதிகள் மற்றும் வளங்கள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவும் வெளிநாட்டு விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

ரொஷான் ரணசிங்கவுக்கு மூன்று மாத விடுமுறை வழங்குவதற்கு பாராளுமன்றம் அண்மையில் அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நிமல் லான்சா தற்போது டுபாயில் இருப்பதா கவும், இன்று இரவு அவர் இலங்கை திரும்ப உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, அமைச்சுப் பதவி கிடைக்காததால் விரக்தியடைந்துள்ள அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அரசியலை விட்டு வெளிநாடு செல்லவுள்ளதாக ஏற்கனவே தமது நண்பர்களிடம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments