நாட்டில் நாளைய தினம் (17) மேற்கொள்ளப்படவுள்ள மின்துண்டிப்பு தொடர்பான தகவலை இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க (Janaka Ratnayake) தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், A, B, C, D, E, F, G, H, I, J, K, L ஆகிய வலயங்களிற்குட்பட்ட பகுதிகளுக்கு சுழற்சி முறையில் காலை ஒன்பது மணி தொடக்கம் மாலை ஐந்து மணி வரையான காலப்பகுதியில் இரண்டுமணி நேரமும், மாலை ஐந்து மணி தொடக்கம் இரவு பத்து மணி வரை ஒருமணி நேரமும் பதினைந்து நிமிடங்களுக்கும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதேபோன்று, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களிற்குட்பட்ட பகுதிகளுக்கு மாலை மூன்று மணி தொடக்கம் இரவு பத்து மணிவரையான காலப்பகுதியினுள் சுழற்சி முறையில் இரண்டு மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்
0 Comments