Advertisement

Responsive Advertisement

ஜனாதிபதியின் விசேட உரை கூறுவது என்ன? .


 மக்களின் சார்பில் நான் எடுக்கும் நடவடிக்கைகள் மீது நீங்கள் நம்பிக்கை வைக்கவேண்டும் - ஜனாதிபதி

அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை மற்றும் விலைகள் அதிகரிப்பு குறித்து நான் அறிவேன்.சமையல் எரிவாயு பற்றாக்குறை எரிபொருள் தட்டுப்பாடு மின்வெட்டு குறித்தும் எனக்கு தெரியும்.கடந்த சில மாதங்களாக மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் குறித்து உணர்வுபூர்வமாக உள்ளேன்,

எங்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பால் பட்ட காரணங்களால் இந்த நிலைமை தொடரும் என்றாலும் நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான சாத்தியமான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்கின்றோம்.

நான் இன்று எடுக்கும் நடவடிக்கைகளிற்கான பொறுப்புகளை நான் ஏற்றுக்கொள்கின்றேன்,மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களிற்கு தீர்வை காண்பதற்காக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து நான்  உறுதியாக உள்ளேன்.நான் தேசிய பொருளாதார பேரவையை நியமித்துள்ளேன்,நான் எடுக்கும் தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றனாவா என்பது குறித்து நான் தொடர்ச்சியாக கண்காணிப்பேன்.

ஆகவே மக்களின் சார்பில் நான் எடுக்கும் நடவடிக்கைகள் மீது நீங்கள் நம்பிக்கை வைக்கவேண்டும்.

சர்வதேச நிதி நிறுவனங்களுடனும், நமது நட்பு நாடுகளுடனும் எங்களது கடன் தவணைகளை திருப்பிச் செலுத்துவது தொடர்பாக விவாதங்களை ஆரம்பித்துள்ளோம். இது தொடர்பில் எமது நாட்டுக்கு நன்மை பயக்கும் புதிய முறையை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடி வருகின்றது. இதற்காக சர்வதேச நாணய நிதியத்துடனான நேற்றைய கலந்துரையாடலும் இடம்பெற்றுள்ளது.


அந்த விவாதங்கள் மூலம், எங்களின் வருடாந்திர கடன் தவணைகள், இறையாண்மை பத்திரங்கள் மற்றும் பலவற்றை செலுத்துவதற்கான வழியை நாங்கள் கண்டுபிடிப்போம். சர்வதேச நாணய நிதியத்துடனான எனது கலந்துரையாடலைத் தொடர்ந்து, நன்மைகள் மற்றும் தீமைகளை ஆராய்ந்த பின்னர் அவர்களுடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளேன்.


🚨 மக்கள் படும் சிரமங்களை நான் நன்கு அறிவேன். கொடூரமான பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் முன்னணியில் இருந்த படையினர் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி பொதுமக்கள் எதிர்கொண்ட அனைத்து சிரமங்களையும் என்னால் நன்கு புரிந்துகொண்டு நிர்வகிக்க முடிந்தது.

உலகில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில் நமது நாடு மட்டும் பாதிக்கப்படவில்லை. முழு உலகமும் பல்வேறு இன்னல்களால் சூழப்பட்டுள்ளது. கொவிட்-19 தொற்றுநோயால் ஏற்படும் அதிகரித்து வரும் கப்பல் செலவுகள், பொருட்களின் விலை உயர்வு மற்றும் சில பொருட்களின் தட்டுப்பாடு ஆகியவை நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை. எவ்வாறாயினும், மக்களின் நலனுக்காக நாங்கள் சலுகை முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.

இந்த நெருக்கடி என்னால் உருவாக்கப்படவில்லை. இந்த நெருக்கடியை உருவாக்குவதற்கு காரணமானவர்கள் இன்று மக்கள் முன்னிலையில் அரசாங்கத்தை விமர்சிக்கும் போது, ​​இந்த நெருக்கடியை உடனடியாக தீர்த்து மக்களுக்கு நிவாரணம் வழங்க முயற்சிக்கிறேன். இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலையில், பிரச்சினைகளுக்கு கூட்டாக தீர்வு காண்பது ஒரு நாட்டின் அரசியல்வாதிகள் மற்றும் புத்திஜீவிகளின் பொறுப்பாகும்.

உங்கள் அழைப்பின் பேரில் நான் அரசியலுக்கு வந்தேன். நீங்கள் அனைவரும் என் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளீர்கள். நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை நான் ஒருபோதும் காட்டிக் கொடுக்க மாட்டேன், அதை மிகுந்த அர்ப்பணிப்புடன் பாதுகாக்கிறேன்.

ஜனாதிபதியின் விசேட உரையிலிருந்து.....

Post a Comment

0 Comments