Advertisement

Responsive Advertisement

அட்லாண்டிக் கடல்கடந்த இராணுவக் கூட்டணி மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால்..... அமெரிக்காவின் கடும் எச்சரிக்கை!


 அமெரிக்கா தலைமையிலான அட்லாண்டிக் கடல்கடந்த இராணுவக் கூட்டணி மீது ரஷ்யா தாக்குதல் ஏதேனும் நடத்தினால், நேட்டோ அதன் அனைத்து நட்பு நாடுகளையும் பிரதேசத்தையும் பாதுகாக்கும் என அமெரிக்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரஸ்ஸல்ஸில் உள்ள தலைமையகத்தில் கூட்டணியின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்திற்கு சென்ற போது அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘எங்களுடையது தற்காப்புக் கூட்டணி. நாங்கள் எந்த மோதலையும் நாடவில்லை. ஆனால் எங்களிடம் மோதல்கள் வந்தால் நாங்கள் அதற்குத் தயாராக இருக்கிறோம். நேட்டோவின் ஒவ்வொரு அங்குலத்தையும் நாங்கள் பாதுகாப்போம்’ எனவும் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments