Home » » சர்வதேச சக்கர நாற்காலிகள் தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சிகள்

சர்வதேச சக்கர நாற்காலிகள் தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சிகள்

 


அஸ்ஹர் இப்றாஹிம்)


சர்வதேச சக்கர நாற்காலிகள் தினத்தை முன்னிட்டு கடந்த முதலாம் திகதி இலங்கையில் முதன் முறையாக சக்கர நாற்காலியில் ஊர்வலம் என்ற நிகழ்ச்சி கண்டியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .
கண்டி போகம்பர விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக சக்கர நாற்காலிகளில் பயணித்தவர்கள்  தலதா மாளிகா வீதி மற்றும் கொட்டுகொடல்ல வீதி  வழியாக கண்டி மாவட்ட செயலகத்திற்கு பேரணியாகச் சென்றனர் .
அதன் பின்னர் கண்டி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவியினால்  ஆளுநரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் குறித்து பொது மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ,  அடிப்படை உரிமை உள்ள மற்றொரு சக்கர நாற்காலியில் இருப்பதனை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் எனவும்  பர்வே  என்ற பெண்கள் உரிமைக்கான அமைப்பின் தலைவர் செல்வி நிஷா சரிபுதீன் நிகழ்வின்போது தெரிவித்தார்.
 சக்கர நாற்காலியில் பயணிப்பவர்களுக்கு பொது இடங்களில் உள்ள வசதிகள் குறித்து ஏற்கனவே கவனம் செலுத்த பட்டுள்ளதாகவும் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியான புதிய கட்டிடங்களை நிர்மாணிக்க வேண்டும் எனவும்  மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே தன் உரையில் தெரிவித்தார் மத்திய மாகாணத்திலுள்ள 1000 அரச உத்தியோகத்தர்களுக்கு சைகை மொழிகள் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  மத்திய மாகாண பிரதம செயலாளர் காமினி ராஜரெட்ண  இதன்போது தெரிவித்தார்.
கண்டி மேலதிக மாவட்ட செயலாளர் உத்பலா ஜயரெட்ண , கண்டி மாவட்ட சமூக சேவை உத்தியோஸ்தர் சந்தன கல்பகே ,  திட்ட முகாமையாளர்  அர்ஜுன எமதுகொல்ல ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |