அரச மருந்தக கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான வைத்தியசாலைகளிலும் மருந்தகங்களிலும் 250க்கும் மேற்பட்ட மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க வைத்தியசாலைகளில் 55 மருந்துகளுக்கு பற்றாக்குறை உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், இந்த 55 மருந்துகளில் மூன்று உயிர்காக்கும் மருந்துகளாகக் கருதப்படுவதாகவும் அவற்றில் 38 அத்தியாவசிய மருந்துகள் எனவும் குறிப்பிட்டார்.
இந்த மருந்துகளில் சில இல்லாமல் நோயாளிகளின் சில நோய்களைக் கட்டுப்படுத்த முடியாது, இதனால் நோய் தீவிரமடைந்து மரணம் ஏற்படும் என சேனாரத்ன சுட்டிக்காட்டினார்.
இப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய சுகாதார அமைச்சரால் முடியவில்லை, இந்த நெருக்கடிக்கான பலனை நாடும் அரசாங்கமும் கூடிய விரைவில் சந்திக்கும் என்றார்
0 Comments