Home » » சிறி லங்கா அரசாங்கம் அச்சிட்டுள்ள அதிகளவான பணத்தொகை!

சிறி லங்கா அரசாங்கம் அச்சிட்டுள்ள அதிகளவான பணத்தொகை!

 


சிறி லங்காவின் தற்போதைய அரசாங்கம் அதிகளவான பணத்தை அச்சிட்டுள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர்  டபிள்யூ.ஏ.விஜேவர்தன (W. A. Wijewardena) தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அசராங்கம் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் 3043 ட்ரில்லியன் ரூபா பணத்தை அச்சிட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

குறித்த காலப்பகுதியில் பணம் 40 வீதத்தினால் அதிகரித்துள்ளது, இது பாரியளவு தொகையாகும்.

சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வென்றெடுக்க முடியாத காரணத்தினால், வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை உருவாகியுள்ளது.

இதன் காரணமாக அரசாங்கம் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரையிலான காலப் பகுதியில் மத்திய வங்கி மற்றும் வணிக வங்கிகளிடமிருந்து 4201 பில்லியன் ரூபா பணத்தை கடனாக பெற்றுக்கொண்டுள்ளது.

தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை காலம் தாழ்த்திப் பெற்றுக்கொள்வதனால் எவ்வித பலனும் கிடைக்கப் போவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |