Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் வீடுகளில் உள்ள பணம் மற்றும் பெறுமதிவாய்ந்த நகைகள் அண்மைக்காலமாக கொள்ளை

  


அஸ்ஹர் இப்றாஹிம்)

  
  கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் வீடுகளில் உள்ள பணம் மற்றும் பெறுமதிவாய்ந்த நகைகள் அண்மைக்காலமாக  தொடர்ந்து கள்வர்களால் களவாடப்பட்டு வருகின்றன.
எனவே இதனை கட்டுப்படுத்திவதற்கும் குறித்த கள்வர்களை கைது செய்வதற்கும் பொலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், பொதுமக்கள் இந்த நடவடிக்கை களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுள்ளனர்.  
 இதனடிப்படையில் பொதுமக்கள் பாதுகாப்புப் பெறவேண்டிய வழிமுறைகள் தொடர்பாகவும் மக்களை தெளிவுபடுத்தும் விதமாக கல்முனை பொலிஸார்  ஒலிபெருக்கி மூலமாகவும், துண்டுப்பிரசுரங்கள் மூலமாகவும் மக்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஒன்றை கல்முனை பொலிஸ் பிரிவுக்குள் முன்னெடுத்துள்ளனர்..

 வீட்டிலுள்ள அனைவரும் வெளியில் செல்ல நேர்ந்தால் தங்களது பணம் மற்றும் பெறுமதிவாய்ந்த நகைகளை பாதுகாப்பான இடங்களில் வைத்து நன்கு பூட்டிவிட்டு அனைத்து திறப்புகளையும் தங்களுடனேயே கொண்டுசெல்லுமாறும் பொலிசார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்

Post a Comment

0 Comments