லிட்ரோ எரிவாயு கொள்கலன்களின் விலையை அதிகரிப்பதற்கான தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை என நிறுவனத்தின் தலைவர் தேஷர ஜெயசிங்க (Deshara Jayasinghe) தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு முதல் நாடளாவிய ரீதியில் லிட்ரோ எரிவாயு கொள்கலனின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்தே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 12.5 கிலோ கிராம் நிறை கொண்ட லாப் எரிவாயு கொள்கலன்களின் விலை 4200ஆக அதிகரிக்கப்பட்ட நிலையில், சில முகவர்கள் லிட்ரோவின் விலையையும் அதிகரித்து விற்பனை செய்வதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்தநிலையில் லிட்ரோவுக்கு அதிக கட்டணங்களை அறவிட்டால், அது சட்டவிரோதம் என்று குறிப்பிட்டுள்ளார்
0 Comments