உக்ரைன் தலைநகர் கீவ்வில் பாரிய குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகப் போர் நடைபெற்ற காலகட்டத்தில் அணுகுண்டு வீசப்பட்டதைப் போன்று ஒரு காட்சி உக்ரைன் தலைநகரில் அரங்கேறியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குண்டு வெடித்ததால் வெகு தூரத்துக்கு ஒளி பரவும் காட்சியும் தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.
அத்துடன், CBS தொலைக்காட்சி செய்தியாளர்கள் கீவ்வில் செய்தி சேகரிக்கும் போது, அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடிக்கும் காட்சி ஒன்று அவர்களது கமெராவில் சிக்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
வெடிகுண்டுகள் வெடிப்பதால் ஏற்படும் ஒளியை அந்த வீடியோவில் காணமுடிவதுடன், தொலைவில் வெடிக்கும் அந்த வெடியின் தாக்கத்தால் செய்தி சேகரிக்கும் நிருபரும் அவரது குழுவினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
0 Comments