Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அமைச்சுப்பதவிகளில் இருந்து தூக்கி எறியப்பட்ட விமல் மற்றும் கம்மன்பில - கோட்டாபய அதிரடி

 


விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விமல் வீரவன்சவிற்கு பதிலாக கைத்தொழில் அமைச்சர் தினேஷ் குணவர்தனவும், உதய கம்மன்பிலவிற்கு பதிலாக எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எஸ்.பி.திஸாநாயக்கவுக்கு கல்வி அமைச்சர் பதவியும், திலும் அமுனுகமவுக்கு போக்குவரத்து அமைச்சர் பதவியும், பவித்ரா வன்னி ஆராச்சிக்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) குழுக் கூட்டத்தை அடுத்து இந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. 


சிறிலங்கா அமைச்சரவையில் ஏற்படுகிறது திடீர் மாற்றம்- வெளியான உள்ளகத் தகவல்!

சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவினால், அவசர அமைச்சரவை மறுசீரமைப்பு ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, எஸ்.பி.திஸாநாயக்க கல்வி அமைச்சராகவும், தினேஸ் குணவர்தன கைத்தொழில் அமைச்சராகவும், பவித்ரா வன்னியாராச்சி, மின்சக்தி அமைச்சராகவும், காமினி லொக்குகே வலுசக்தி அமைச்சராகவும், திலும் அமுனுகம போக்குவரத்து அமைச்சராகவும் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments