ஆசிரியை ஒருவர் பாடசாலை மாணவன் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு கொழும்பு மேலதிக நீதவான் நேற்று (10) உத்தரவிட்டுள்ளார்.
34 வயதுடைய ஆசிரியை ஒருவர் பாடசாலை மாணவன் ஒருவரை நான்கு வருடங்களாக துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் மாணவன் ஒருவரே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், குறித்த மாணவனுக்கு தற்போது 20 வயது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருடாந்த கிரிக்கெட் போட்டியில் 16 வயது மாணவனும் ஆசிரியையும் ஒருவருக்கொருவர் பழக்கமாகியுள்ளனர்.
பின்னர் ஆசிரியைக்கும் மாணவருக்கும் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு ஏற்பட்டது.
பின்னர் பாடசாலை கணினி அறையில் ஆசிரியை மாணவனை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
குறித்த ஆசிரியையும் மாணவனும் கல்கிசையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றிற்கு சுமார் 60 தடவைகள் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த ஆசிரியை தனது அடையாள அட்டையை பயன்படுத்தி ஹோட்டலில் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனி அபேவிக்ரம பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு நேற்று உத்தரவிட்டுள்ளார்
0 comments: