Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கலவர பூமியாக மாறிய கனடா!! அடுத்தடுத்து போராட்டம்


 கனடாவில் பாரவூர்தி சாரதிகளுக்கான கட்டாய தடுப்பூசி விவகாரம் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு சற்று தணிந்து வரும் சூழலில், எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தால் மீண்டும் பரபரப்பு நிலை உருவாகியுள்ளது.

கனடாவில் எரிவாயு கொண்டு செல்லும் குழாய் அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2020ஆம் ஆண்டு போராட்டக்காரர்கள் கனடாவின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கனடாவில் சி.ஜி.எல் குழாய் வழியாக, இயற்கை எரிவாயு கிழக்கு பிரிட்டிஷ் கொலம்பியாவிலிருந்து கொண்டுசெல்ல கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் கடும் ஆட்சேபனை மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் செயற்படுத்தப்பட்டு வருகிறது.

குழாய்கள் அமைக்கும் பணி கிட்டத்தட்ட 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் இப்போது மீண்டும் அந்த போராட்டத்தை கையில் எடுத்துள்ள அவர்கள், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களை சேதப்படுத்தியுள்ளனர்.

எரிவாயு குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை போராட்டக்காரர்கள் தாக்கியுள்ளதுடன், அங்கிருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மீது போராட்டக்காரர்கள் புகை குண்டுகளை எறிந்து, தீப்பந்தங்களால் தாக்கியுள்ளனர். அதில் சில காவல்துறையினர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை நடந்ததாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments