Home » » மட்டக்களப்பில் முதலாம் இரண்டாம் மூன்றாம் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள விசேட தடுப்பு ஊசி நிலையம்

மட்டக்களப்பில் முதலாம் இரண்டாம் மூன்றாம் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள விசேட தடுப்பு ஊசி நிலையம்


 (சிஹாரா லத்தீப்)


சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய சுகாதாரத் திணைக்களம் பெருகி வரும் ஒமிக்ரோன் தொற்றினை கருத்தில்கொண்டு முதலாம் இரண்டாம் மூன்றாம்  கொரோனா தடுப்பூசிகளை வழங்கும் விசேட தடுப்பு ஊசி நிலையம் மட்டக்களப்பு நகரில் இன்று செயல்படுகிறது.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்ஜி. சுகுணனின் வழிகாட்டுதலில் மட்டக்களப்பு நகர சுகாதாரவைத்திய அதிகாரி வி உதயகுமாரின் மேற்பார்வையில் இந்த விசேட தடுப்பு ஊசி ஏற்றும் நிலையம் இன்று காலை எட்டரை மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அரசடி தேவநாயகம் கலையரங்கில் செயல்படுகிறது .

எனவே இந்த விசேட தடுப்பு பூசி நிலையத்தில் இதுவரையில் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளாதவர்கள் அல்லது இரண்டாம் மூன்றாம் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாதவர்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறு மட்டக்களப்பு நகர சுகாதார வைத்திய அதிகாரி உதயகுமார் தெரிவித்தார் .

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிளும் சுகாதாரத் திணைக்களம் மற்றும் இராணுவத்தினரும் விசேட தடுப்பூசி நிலையங்களை ஏற் படுத்தி சினோபாம் மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகளை ஏற்றும் பணிகளை சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |