Advertisement

Responsive Advertisement

குடிபோதையில் வாகனம் செலுத்துபவர்களை பிடிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 


பல்வேறு சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக வருகை தரும் நபர்கள் தொடர்பில் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட தரவுகளை மதிப்பிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதிகளவான லொறி மற்றும் பஸ் சாரதிகள் போதையில் வாகனங்களை செலுத்துவது தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதி 1,213 பேர் சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான மருத்துவச் சான்றிதழ்களைப் பெறுவதற்காக போக்குவரத்து மருத்துவ நிறுவனத்திற்கு வருகை தந்துள்ளனர்.


குறித்த தினத்தில் பெறப்பட்ட மாதிரிகளில் 145 மாதிரிகளில் பல்வேறு போதைப் பொருட்கள் பாவனை இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கஞ்சா, ஹெரோயின் மற்றும் ஐஸ் ஆகியவற்றை பயன்படுத்தும் நபர்கள் சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற விண்ணப்பித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தொடர்ந்து மது அருந்துபவர்களும் விண்ணப்பதாரர்களில் இருந்தனர்.
அந்தத் தரவுகளின் அடிப்படையில், போதையில் வாகனம் செலுத்தும் நபர்களைக் கண்டறியும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒருவர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கண்டறியப்பட்டால், உரிமம் இரத்து செய்யப்படும், ரூ.25,000 அபராதம் மற்றும் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments