( தாரிக் ஹஸன்)
நாட்டின் 74வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு கல்முனைக்குடி சமுர்த்தி வங்கி வலயத்தினால் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. .
74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனைக்குடி சமுர்த்தி வங்கி வலயத்தில் சமுர்த்தி பயனாளிகளுக்கு கடன் வழங்குதல் , பயன்தரும் பழ மரக்கன்றுகள் நடுதல் மற்றும் சமுர்த்தி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற விசேட வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கல்முனை பிரதேச செயலாளர் பிரிவின் கல்முனைக்குடி 10 , 14 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் 2 லட்சம் ரூபாவில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு இரண்டு வீடுகளை பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று திறந்து வைத்து கையளிக்கும் நிகழ்வு என்பன சமூர்த்தி வங்கி வலய முகாமையாளர் மோசேஸ் புவிராஜ் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு அதிதிகளாக கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாக்கத் அலி, அம்பாரைமாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம். எஸ். எம் .சப்ராஸ், கல்முனை பிரதேச செயலக சமுர்த்திதலைமைப் பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ், கருத்திட்ட முகாமையாளர் ஏ.எம்.எஸ்.நயீமா ,சமுர்த்தி மகாசங்க முகாமையாளர் எஸ்.எஸ்.பரீரா ஆகியோர் உட்பட மகாசங்க உதவி முகாமையாளர் எம். எம். எம். மன்சூர், கல்முனைக்குடி சமுர்த்தி வங்கி வலய உதவி முகாமையாளர்களான எம். ஐ. எம். மூஜீப் ,எஸ். எல். அஸீஸ் , சமூர்த்தி சமுக அபிவிருத்தி உத்தியோகத்தர் என். எம். நெளசாத் கல்முனைக்குடி 10 , 14 சமூர்த்தி உத்தியோஸ்தர்களான எஸ். எம். தாஹிரா, எம். ஜெமில் மற்றும் பிரிவு நிலை உத்தியோகத்தர்கள், சமுக மட் ட பிரதிநிதிகள் என பலரும் இதன் போது கலந்து சிறப்பித்தனர்.
0 Comments