Home » » பெரும்போக வேளாண்மைச் செய்கையில் ஈடுபட்டு அறுவடைக்கு தயாராகவிருந்த வேளாண்மையை 15 இற்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக வந்து சேதப்படுத்தியுள்ளன

பெரும்போக வேளாண்மைச் செய்கையில் ஈடுபட்டு அறுவடைக்கு தயாராகவிருந்த வேளாண்மையை 15 இற்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக வந்து சேதப்படுத்தியுள்ளன

 


( அஸ்ஹர் இப்றாஹிம்
அம்பாறை மாவட்டத்திலுள்ள இறக்காமம் கமநலசேவை பிரிவிற்குட்பட்ட வாங்காமம் தொடரிப்பள்ளத்தில் செய்கை பண்ணப்பட்டு அறுவடைக்கு தயாராகவிருந்த வேளாண்மையே இவ்வாறு சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இப் பெரும் போகத்தில் விவசாயிகள் இரசாயனப் பசளையில்லாத நிலையில் மிகவும் கஸ்டப்பட்டு  இலட்சக்கணக்காக பணத்தினை செலவிட்டு அதன்பயனை அனுபவிக்க இருக்கும் நிலையில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளமை மிகவும் வருந்தத்தக்க செயலாகும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
வேளாண்மையை சேதம் செய்த யானைக்கூட்டம் அவர்களின் இளைப்பாறும் வாடிகளையும் உடைத்துச் சென்றுள்ளது.
இப் பிரதேசத்தில் செய்கை பண்ணப்பட்டுள்ள சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட வேளாண்மையை பாதுகாப்பதற்கு அச்சமடைந்துள்ளதுடன் , தமது உயிருக்கும் உத்தரவாதமில்லாத துர்ப்பாக்கிய நிலைக்கும் இப்பிரதேச விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |