12 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் தனது தாய் கைத்தொலைபேசியைக் கொடுக்க மறுத்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ள தாக அநுராதபுரம் தஹயியாகம பிரதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர் அனுராதபுரம் புனித சூசையப்பர் கல்லூரியின் ஏழாம் தர மாணவர் என அடையா ளம் காணப்பட்டுள்ளார்.
கைத்தொலைபேசியில் ‘கேம்’ விளையாடும் பழக்கம் கொண்ட மாணவன் கடந்த 11ஆம் திகதி பாடசாலையைத் தவறவிட்டதால் அவரது தாயார் சிறுவனைத் திட்டிவிட்டு, கைத்தொலை பேசியை பறித்துச் சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த சிறுவன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒன்லைன் கற்றலின் போது தாயாரின் கைத்தொலைபேசியை பயன்படுத்திய குறித்த மாணவன் அவ்வேளை ‘கேம்’ விளையாட்டில் ஈடுபட்டதாகத் தெரிய வருகிறது.
சிறுவனின் தாயார் அரசாங்க நிறுவனத்தில் எழுதுவினைஞராகவும் தந்தையார் தனியார் பேருந்து நிறுவன ஊழியராகவும் தொழில் புரிந்து வருகின்றனர்.
0 Comments