( றம்ஸீன் முஹம்மட்)
இலங்கை மற்றும் கட்டார் நாடுகளிலே குறிப்பாக கிரிக்கட் துறையிலும் சமூக சேவைகளிலும் தனக்கான ஓர் இடத்தை பிடித்து முன்னோடியாக திகழ்கின்ற ஈஸ்ட்ன் பேள்ஸ் ஸ்ரீலங்கா மற்றும் கட்டார் நிருவனத்துடைய வெற்றி விழாவும் வீரர்கள் கெளரவிப்பு நிகழ்வும் கடந்த ஞாயிற்றுக் கிழமை சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது கிரிக்கட் சங்கத்தின் தலைவர் எம்.எம். நிஜாமுதீன் பிரதம அதிதியாகவும் , சாய்ந்தமருது கிரிக்கட் சங்கத்தின் உப தலைவர் ஏ. றம்ஸான் ,சாய்ந்தமருது கிரிக்கட் சங்கத்தின் சுற்றுப் போட்டி தவிசாளர் எம்.ஜே.எம். றாஜுடீன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
.
0 Comments