Advertisement

Responsive Advertisement

ஒரு இலட்சம் உட்கட்டுமான அபிவிருத்திப் பணிகளை நாடு பூராகவுமுள்ள கிராமசேவகர் பிரிவுகள்தோறும் ஆரம்பிக்கும் நிகழ்வு



( தாரிக் ஹஸன்)

“கிராமத்துடனான உரையாடல்” அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஒரு இலட்சம் உட்கட்டுமான அபிவிருத்திப் பணிகளை நாடு பூராகவுமுள்ள கிராமசேவகர் பிரிவுகள்தோறும் ஆரம்பிக்கும் நிகழ்வின், காரைதீவு பிரதேச செயலகப் பிரிவின் பிரதான நிகழ்வு காரைதீவு பிரதேச செயலாளர் திரு. சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் காரைதீவு கமு/சண்முகா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் காரைதீவு கோட்டக் கல்வி அதிகாரி திரு. ஜெயகொடி டேவிட், பாடசாலை அதிபர் திரு. எஸ். மணிமாறன், ஆசிரியர்கள், மாணவர்கள், காரைதீவு-11 கிராம சேவகர் பிரிவுக்கு பொறுப்பான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. ஆர். கிருஷ்ணமாலினி மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். இத்திட்டத்தின் கீழ் பாடசாலையின் கட்டட புனருத்தாரணத்திற்கென 1.2 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், இதே போன்ற கரைதீவு பிரதேச செயலக பிருவுக்குட்பட்ட ஏனைய கிராம சேவகர் பிரிவுகளில் இடம்பெற்ற நிகழ்வுகள் உதவி பிரதேச செயலாளர் திரு. எஸ். பார்த்தீபன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு. ரீ. மோகனகுமார், நிருவாக உத்தியோகத்தர் திரு. கே. கமலநாதன், நிருவாக கிராம சேவகர் திரு. என். மோகன், தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் ஜனாப். எம். எம். அச்சு மொகம்மட், சமுர்த்தி முகாமையாளர் ஜனாப். ஏ. எல். ஏ. ஹமீட் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments