Advertisement

Responsive Advertisement

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் நாட்டின் 74வது சுதந்திரதின விழா நிகழ்வுக


 ( தாரிக் ஹஸன்)


அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் நாட்டின் 74வது சுதந்திரதின விழா நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.  
பிரதிக் கல்விப் பணிப்பாளர் (நிர்வாகம்) ஏ.ஜி.பஸ்மில் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுகளில், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.றஹ்மத்துல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
நிகழ்வில், தேசியக் கொடியேற்றி, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, வலயக் கல்வி அலுவலக வளாகத்தில் வலயக் கல்விப் பணிப்பாளரினால் மரக்கன்று நடப்பட்டது.
மூவின தேசபிமானிகளால் இலங்கை தாய் நாட்டிற்கு பெற்றுத்தரப்பட்ட சுதந்திரத்தின் 74வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நாங்கள் இன ஒற்றுமை, சமூகங்களுக்;கிடையில் புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, சகிப்புத்தன்மை போன்ற உயர்பண்புகளுடன் மிளிர்;ந்து நாட்டை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டும் என்று இந்நிகழ்வில் உரையாற்றிய வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.றஹ்மத்துல்லாஹ் கேட்டுக் கொண்டார்.
சுதந்திர தினத்தின் முக்கியத்துவம், இலங்கை நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட மூவினத் தலைவர்கள், சுதந்திரத்தின் வரலாறு என்பன குறித்தும் அவர் விரிவான விளக்கமளித்தார்.
பிரதி, உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக்கல்வி அதிகாரிகள், ஆசிரிய ஆலோசகர்கள், நிர்வாக உத்தியோகத்தர், முகாமைத்துவ வேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அலுவலகப் பணியாளர்கள் ஆகியோர் நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு பாற்சோறும் வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments