நாட்டில் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 30 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக கொவிட்-19 கட்டுப்படுத்தல் தொடர்பான இராஜாங்க அமைச்சின் இணைப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாளாந்தம் ஆயிரத்திற்கும் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். இதுவரை பதிவான மரணங்களின் எண்ணிக்கையிலும், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது தொற்றாளர் எண்ணிக்கை 30 சதவீதத்தினாலும், மரணங்களின் எண்ணிக்கை 8 - 10 சதவீதத்தினாலும், ஒட்சிசன் தேவையுடைய தொற்றாளர் எண்ணிக்கை 4 சதவீதத்தினாலும் மற்றும் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை 4 - 5 சதவீதத்தினாலும் அதிகரித்துள்ளது.
ஒமிக்ரோன் பரவல் அதிகரிப்புடன் இவ்வாறு தொற்றாளர் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனினும் இவ்வாறான நிலைமையிலும் கூட 39 சதவீமானோர் மாத்திரமே பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளனர். எஞ்சியோரும் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டால் மாத்திரமே இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.
0 comments: