Home » » மொரோக்கோவில் சுமார் 104 அடி ஆழ்கிணற்றினுள் விழுந்த 5 வயது சிறுவன் ரைய்யான்

மொரோக்கோவில் சுமார் 104 அடி ஆழ்கிணற்றினுள் விழுந்த 5 வயது சிறுவன் ரைய்யான்

 


3 நாட்கள் இரவு பகலாக மீட்பு பணி தொடர்கிறது!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் இடம்பெற்ற நெஞ்சை உருக்கும் அதே சம்பவம் ஒன்று மொரோக்கோவில் இடம்பெற்றுள்ளது.

மொரோக்கோவின்  Tamrout எனும் நகரில் இந்த அனர்த்தம் பதிவாகியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (01) மாலை கிணற்றின் அருகில் விளையாடிக்கொண்டிருந்தபோது தவறுதலாக இந்த சிறுவன் கிணற்றினுள் வீழ்ந்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும், கிணற்றினுன் கெமரா கொண்டு பரிசோதித்ததில் தலையில் சிறு காயங்களுடன் சிறுவன் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது.












இதனையடுத்து, சிறுவனை மீட்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ந்து இரவு பகலாக மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

ரயான் சுமார் 104 அடி ஆழத்தில் வீழ்ந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீட்பு பணிகள் துரிதமாக இடம்பெற்று வரும் இந்நிலையில் பாரிய மண்சரிவு ஏற்பட்டு மீட்பு பணியில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக லேட்டஸ்ட் செய்திகள் தெரிவிக்கின்றன.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |