( தாரிக் ஹஸன்)
வவுனியா பம்பைமடுப்பகுதியில் நேற்று (07) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி இரும்புக் கேடர்களை ஏற்றிவந்த கென்டர் வாகனம் பம்பைமடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் நின்ற மரத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது.
விபத்தின்போது வாகனத்தில் பலர் பயணித்திருந்த நிலையில் இருவர் படுகாயமைடந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் சிறுகாயமடைந்துள்ளனர்.
விபத்து தொடர்பாக பூவசரங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 Comments