இலங்கையின் அந்நிய செலாவணி வருமானத்தின் பிரதான வருமான மூலங்களில் ஒன்றான வெளிநாடுகளில் பணியாற்றுவோர் அனுப்பும் பணத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் வருகையால் இலங்கைக்கு கிடைக்கப் பெறும் அந்நிய செலாவணித் தொகை குறைந்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 325.2 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதத்தில் இந்த தொகை 271.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது. கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது 2021ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அந்நிய செலாவணி வருமானம் 60 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் 812.7 மில்லியன் டொலர் வருமானம் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில் 2021ம் ஆண்டு அந்த தொகை 325.2 மில்லியன் டொலர்களாக குறைவடைந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக 2020ம் ஆண்டில் 7193.9 மில்லியன் டொலர் அந்நிய செலாவணி கிடைக்கப் பெற்றுள்ளதுடன், இது 2021ம் ஆண்டு 5491 மில்லியன் டொலர்களாக குறைவடைந்துள்ளது.
சட்ட ரீதியான வழிமுறைகளைப் பயன்படுத்தி இலங்கைக்கு பணம் அனுப்பி வைக்குமாறு மத்திய வங்கி பல தடவைகள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: