அஸ்ஹர் இப்றாஹிம்
பள்ளிவாசல் துறை லிவர் பூள் விளையாட்டு கழகம் தமது கழகத்தின் சிரேஸ்ட வீரர்களை கௌரவிக்கும் வகையிலும் இப்பிரதேசத்தில் இலங்கையின் தேசிய விளையாட்டான கரப்பந்தாட்டத்தினை இப்பிரதேசத்தில் பிரபல்யம் படுத்தும் வகையிலும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி பள்ளிவாசல்துறை பொது கரப்பந்தாட்ட மைதானத்தில் பகல் இரவு போட்டியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இச் சுற்றுப்போட்டியில் கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினர்கள் மூன்று அணிகளாக பிரிக்கப்பட்டும் தற்போது உள்ள கனிஷ்ட அங்கத்தவர்களை மூன்று அணிகளாகவும் பிரித்து போட்டிகள் நடாத்தப்பட்டன.
சிரேஸ்ட உறுப்பினர்களைக்கான போட்டியில் ஆர் டீ பி அணியினர் சம்பியன் கிண்ணத்தை சுவிகரித்துக் கொண்டனர்.
கனிஸ்ட அங்கத்தவர்களுக்கானஅணியினரான லிவர்பூள் சீ அணியினர் கனிஷ்ட பிரிவு சம்பியன் கிண்ணத்தினை சுவிகரித்தனர்
இச்சுற்றுப்போட்டியில் 60 வயதுக்கு மேற்பட்ட சிரேஸ்ட உறுப்பினர்களும் பங்குபற்றி தமது திறமையினையை வெளிக்காட்டியதுடன் அவர்களுக்கு பதக்கமும்,நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது
0 comments: