(அஸ்ஹர் இப்றாஹிம்)
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய டாக்டர் ஜி. சுகுணன் கடந்த செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட பதில் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்
இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே டாக்டர் றிபாஸ் நியமிக்கப்பட்டு இன்று தனது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார்.
காத்தான்குடியினைச் சேர்ந்த இவர் இறுதியாக பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.
0 Comments