Advertisement

Responsive Advertisement

6.1 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் இசங்கணிச்சீமை வட்டாரத்தில் உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கான பயனாளிகளை தெரிவு செய்யும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.



( றம்ஸீன் முஹம்மட்)

6.1 மில்லியன்  நிதி ஒதுக்கீட்டில் இசங்கணிச்சீமை வட்டாரத்தில் உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கான பயனாளிகளை தெரிவு செய்யும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

அக்கரைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட இசங்கணிச்சீமை வட்டாரத்தில் உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்பதற்காக அரசாங்கத்தினால் 2022 ஆம் ஆண்டுக்கான காலாண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட வட்டாரங்களுக்கு மூன்று மில்லியன், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு 4 மில்லியன் மற்றும் தேசிய காங்கிரஸின் தலைவர் அல்ஹாஜ் ஏ  எல் எம் அதாவுல்லா அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக அக்கரைப்பற்று பிரதேச சபைக்கு 12 மில்லியன் கிடைக்கப்பெற்றது. அதற்கு அமைவாக இன்று பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டனர்.

நூறு வீதமான வெளிப்படைத்தன்மையுடன் வட்டார பொது மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து அரசாங்கத்தின் கருத்திட்டங்களை மக்களுக்குத் தெளிவு படுத்தியதுடன் இசங்கணிச்சீமை வட்டாரத்தில் அபிவிருத்திக் குழுவினால் இந்த நிதியை பயன்படுத்துவதற்கான விடயங்கள் நிறைவேற்றப்பட்டது.

 அதனடிப்படையில் ஒன்பது லட்சம் பாடசாலை அபிவிருத்திக்காகவும், 5 லட்சம் பள்ளிவாசலின் உட்கட்டமைப்பு தேவைகளுக்காகவும், 5 லட்சம் பெரிய மின்குமிழ்கள் பிரதான பாதைக்கு  பொருத்துவதற்காகவும்  இசங்கணிச்சீமை வட்டார அபிவிருத்தி குழுவினால் தீர்மானிக்கப்பட்டது.

 மீதமுள்ள 6.1 மில்லியன் நிதியை உள்ளூர் உற்பத்திகளை மேம்படுத்துவதற்காக கறவைப் பசுக்கள், கோழிப் பண்ணை அமைத்தல், சுய முயற்சியாளர்கள், புதிய கண்டுபிடிப்பின் ஊடாக மக்களுக்கு பயனுள்ள உற்பத்தியாளர்களை அடையாளம் கண்டு அதற்குரிய பயனாளிகள் இன்று தெரிவு செய்யப்பட்டனர்.

இந்நிகழ்வு  இசங்கணிச்சீமை சமுர்த்தி உத்தியோகத்தர் ஜனாப் இல்யாஸ் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜனாப் இர்பான் அவர்களின் ஏற்பாட்டில் இசங்கணிச்சீமை ஜும்மா பள்ளிவாசல் கூட்ட  மன்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு அக்கரைப்பற்று பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் ரீ எம் ஐய்யூப் அவர்கள் கலந்துகொண்டு இத்திட்டத்தில் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை மக்களிடத்தில் எந்தவிதமான ஒளிவு மறைவுமின்றி எடுத்துக் கூறியதுடன் உரிய முறையில் பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான சிறந்த கருத்துக்களை முன் வைத்ததுடன் உள்ளுராட்சி மன்றங்களுக்கு  ஒதுக்கப்பட்ட  4 மில்லியன் நிதியையும்  தேசிய காங்கிரஸ் தலைவரால் அக்கரைப்பற்று பிரதேச சபைகு கிடைக்கப்பெற்ற ஒட்டுமொத்தமான நிதியையும் மக்களின் வாழ்வாதார உள்ளூர் உற்பத்திக்கு முன்னுரிமை வழங்கி அதை நடைமுறைப் படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் எடுத்துக் கூறப்பட்டது.

இதன்போது இசங்கணிச்சீமை ஜும்மா பள்ளிவாசல் தலைவர் ஐ கே சுலைமாலெப்பை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ஊர் பிரமுகர்கள் முக்கியஸ்தர்கள் பிரசன்னமாகியிருந்தனர்.


Post a Comment

0 Comments