( தாரிக் ஹஸன்)
திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தொற்றாளர்களின் வீதம் அதிகரித்துக் காணப்படுகின்றது.
இதனடிப்படையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று (19) காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை மூலம் 18 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதில் கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வயதுடைய இரட்டை குழந்தையர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் தம்பலகாமம் ,கன்னியா ,நிலாவெளி மற்றும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகம் போன்ற இடங்களில் தொற்றாளர்கள் மேலும் அதிகரித்து வருவதாகவும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமை நேர வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
பொதுமக்கள் வைத்தியசாலைக்கு வரும்போதும் பாதுகாப்பாக சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி முகக் கவசங்கள் அணிந்து வருகை தருமாறும் மக்கள் அதிகம் நடமாடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments