Advertisement

Responsive Advertisement

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்: ஓய்வுபெற்ற #வைத்தியரின் வீட்டில் இருந்து துப்பாக்கிகள் மீட்பு

 


பொரளையில் உள்ள ‘ஓல் செயின்ட்ஸ்’ தேவாலயத்தில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற வைத்தியரின் வீட்டில் இருந்து பெருமளவிலான துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவரிடமிருந்து மேலும் இரண்டு வாள்கள் மற்றும் கத்தியொன்று கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் எம்பிலிப்பிட்டிய – பனாமுர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது, அவர் குறித்த வைத்தியர் தொடர்பில் தகவல்களை வழங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments