Advertisement

Responsive Advertisement

பெற்றோரின் அலட்சிய போக்கே சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு வழிவகுக்கின்றன



பெற்றோரின் அலட்சிய போக்கே சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு வழிவகுக்கின்றன.

சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர்

( எம்.எம்.ஜெஸ்மின்)


பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் அலட்சியப் போக்குடன் செயற்படுவதனாலேயே அதிகளவில் சிறுவர் துஷ்பிரயோக செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

இவ்வாறு சம்மாந்துறை நெய்னாகாடு பகுதியில் இடம்பெற்ற பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்ட முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் , சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிர் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் ,

நகரப்புறங்களை விட கிராமப் புற பகுதிகளில் அதிகளவான சிறுவர்கள் தாய் தந்தையரின் பராமரிப்பு இன்றியும் பாதுகாப்பு இன்றியும் இருக்கின்றனர்.
இதற்கு பிரதான காரணம் கிராமப்புற மக்கள் அன்றாடம் தொழில் செய்து தமது ஜீவனோபாயத்தை முன்னெடுத்து செல்பவர்களாகவும் குடும்பத்தில் அதிக எண்ணிக்கையான அங்கத்தவர்களை கொண்டதாகவும் , வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களாகவும் இருப்பதுடன் சிறுவர் உரிமைகள் , பாதுகாப்பு தொடர்பில் போதிய அறிவின்மையும் விழிப்புணர்வின்மையுமே  ஆகும்.

வறுமை காரணமாக தமது பிள்ளைகள் வெளி இடங்களுக்கு செல்வதாலும் அங்கு தங்கி தொழில் செய்வதாலும் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
தமது பிள்ளைகள் காலையிலிருந்து மாலை வரை எங்கு செல்கின்றார்கள் , அவர்கள் யாருடன் பழகுகின்றார்கள் , தமது பிள்ளை தொழில் செய்யும் இடம் பாதுகாப்பானதா என்பதில் பெற்றோர் கூடிய கவனம் செலுத்தினால் கூடிய வரையில் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்கலாம்.
என்று குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments