Home » » பிள்ளைகள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதற்கு பாடசாலை இடைவிலகலும் ஒரு காரணமாகும்.

பிள்ளைகள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதற்கு பாடசாலை இடைவிலகலும் ஒரு காரணமாகும்.




(அஸஹர் இப்றாஹிம் )

கற்க வேண்டிய வயதில் பாடசாலைக்கு செல்லாமல் பாடசாலை கல்விக்கு முற்றுப் புள்ளி வைக்கும் பிள்ளைகளை அடையாளம் கண்டு அவர்களை மீண்டும் பாடசாலை கல்வியை தொடர வைக்க வேண்டிய பொறுப்பு சமூகத்திலுள்ள அனைவரினதும் பொறுப்பாகும்
. இவ்வாறு மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயத்தில் இடம்பெற்ற இடைவிலகிய மாணவர்களை மீண்டும் பாடசாலைக்கு இணைப்பது சம்பந்தமாக பெற்றோருடனான சந்திப்பில் உரையாற்றிள அதிபர் ஏ.எல்.எம்.ஏ.நழீர் அதரிவித்தார்.
, அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்
கல்வி கற்க வேண்டியது சகல பிள்ளைகளுக்குமான உரிமையாகும்.சிறு வயது முதல் தமது பிள்ளைகளுக்கு பாடசாலை கல்வியோடு மார்க்க கல்வியையும் ஊட்ட வேண்டிய பாரிய பொறுப்பு ஒவ்வொரு  பெற்றோருக்கும் உரியது.ஆனால் சில பெற்றோர் தமது பிள்ளைகளின் கல்வியில் ஏனோதானோ என்று பொடுபோக்காக இருப்பது மிகவும் கவலையைத் தருகின்றது.
உலகளாவிய ரீதியில் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் கல்வியின் முக்கியத்துவம் பற்றி பலரும் பலவாறு கூறிவருகின்ற இன்றைய காலகட்டத்தில் கல்வி கற்பிக்காமலும் பாடசாலைகளுக்கு பிள்ளகளை அனுப்பாமலும் , கற்றுக் கொண்டிருக்கும் பிள்ளையை பாதி வழியில் இடைநிறுத்துவதும் மிகவும் பாரதூரமான ஒரு நிகழ்வாகும்.
சில பெற்றோர் வறுமையை காரணம் காட்டி பிள்ளைகளை சிறு வயதிலிருந்தே தொழிலுக்கு செல்லுமாறு பணிப்பதும் , தமது தொழிலில் வேறு நபர்களை அமர்த்தாமல் தமது பிள்ளைகளை ஈடுபடுத்துவதும் தவிர்க்கப்பட வேண்டிய விடயமாகும்.
அரசாங்கம் பெற்றோரின் சுமையை குறைப்பதற்காகவும் மாணவர்களை கல்வியின் பால் ஈர்ப்பதற்குமாக இலவசக் கல்வியியனை அறிமுகப்படுத்தி பாடநூல்கள் , சீருடைத்துணி என்பவற்றை இலவசமாக வருடாவருடம் வழங்கி வருகின்றது. இந்த நிலையில் வறுமையை ஒரு காரணமாக காட்டுவதென்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு காரணமாகும்.ஒரு மாணவன் பாடசாலையில் கல்வி கற்க செல்வதன் மூலம் புத்தக கல்வியை மட்டுமல்ல புறக்கிருத்திய செயற்பாடு , நல்ல பழக்க வழக்கங்கள் , பிறருக்கு உதவும் மனப்பாங்கு , ஆசிரியர்களுக்கும் பெரியோர்களுக்கும் மரியாதை செலுத்தும் நல்ல பண்புகள் , சமூகத்திற்கு எதிர்காலத்தில் தலைமைதாங்கும் தலைமைத்துவம் போன்றவற்றை கற்றுக் கொள்கின்றான்.
இடைவிலகிய மாணவனொருவரின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாக அமைவதுடன் சமூக விரோத செயல்கள் , போதைவஸ்து பாவனைக்கு அடிமையாதல் போன்றவற்றிற்கு ஏதுவாக அமைகின்றது.பிரதேசத்தில் பாடசாலைகள் திறக்கப்படும் போது சிறைச்சாலைகள் மூடப்படுவதாக நமது முன்னோர்கள் கூறியுள்ள நிலையில் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாமல் வேறு திசைகளில் அவர்களது கவனத்தை திருப்புவது ஒரு பிழையான வழிநடத்தலாகும்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |