Advertisement

Responsive Advertisement

சர்வதேச குத்துச் சண்டைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கணேஷ் இந்துகா தேவியின் சாதனைக்குப் பாராட்டு...



சர்வதேச குத்துச் சண்டைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கணேஷ் இந்துகா தேவியின் சாதனைக்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் , மன்னார் , முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான காதர் மஸ்தான் பாராட்டு
 
( அஸ்ஹர் இப்றாஹிம்)

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கரிப்பட்ட முறிப்பு புதிய நகரில் வாழ்ந்து வரும் கணேஸ் இந்துகா தேவி பாகிஸ்தான் லாஹுரில் இடம்பெற்ற இருபத்தைந்து வயதிற்குட்பட்ட 50-55 கிலோ கிராம் எடைப்  பிரிவினரருக்கான சர்வதேச குத்துச் சண்டைப்   போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று  இச்சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

நாட்டிற்கும் வட மாகாணத்திற்கும்  புகழையும் பெருமையையும்  தேடித்தந்துள்ள  கணேஸ் இந்துகா தேவி எமது இளைய சமூகத்திற்கு ஒரு முன்மாதிரியை காட்டித்தந்துள்ளார்.  இச்சாதனை  புரிந்த கணேஸ் இந்துகா தேவியை மனமாற வாழ்த்துவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் , மன்னார் , முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான காதர் மஸ்தான் பாராட்டு தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments