Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மீண்டும் களத்தில் இறங்கும் மைத்திரி! பரபரப்பாகும் கொழும்பு அரசியல்

 


முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena), நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெறுவதற்கு சில முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எதிரணி உறுப்பினர்கள் குழுவின் ஆதரவுடன் பதவியை கைப்பற்ற அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனைப் பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை, எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தின் போது சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைச்சர்களும் பதவியில் இருந்து நீக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுதந்திரக் கட்சி தற்போது இரண்டு அமைச்சரவை அமைச்சுகளையும் இரண்டு இராஜாங்க அமைச்சுகளையும் கொண்டுள்ளது. அத்தோடு, நாடாளுமன்றத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 14 உறுப்பினர்களும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.  

Post a Comment

0 Comments