Advertisement

Responsive Advertisement

இன்று மின் விநியோக தடை? - அறிவிப்பு வெளியானது

 


நாடு முழுவதும் இன்றைய தினம் மின்சார விநியோகம் தடைப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.


இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தினால் உராய்வு எண்ணெய் வழங்கப்பட்டுள்ள நிலையில், மின்சார உற்பத்தியை வழமை போன்று மேற்கொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.

இதனால், மின்சார விநியோக தடையை ஏற்படுத்த வேண்டிய தேவை இன்று ஏற்படாது எனவும் சபை அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை கொடுப்பனவு செலுத்தப்படாமையினால், உராய்வு எண்ணெய் விநியோகத்தை பெற்றோலிய கூட்டுதாபனம் இடைநிறுத்தியுள்ளது.

இதனால், சபுகஸ்கந்த மற்றும் குகுலே கங்கை ஆகிய மின்உற்பத்தி நிலையங்களில் மின்சார உற்பத்தியை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில நேற்று முன்தினம் மற்றும் நேற்றைய தினங்களில் ஒரு மணிநேர மின்சார தடை ஏற்படுத்தப்பட்டது,

இந்த நிலையிலேயே, இலங்கை மின்சார சபைக்கு, உராய்வு எண்ணெயை, இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் வழங்கியுள்ளது

Post a Comment

0 Comments