Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் அதிகரிக்கும் அபாயம்- வெளியானது அறிக்கை!

 


இலங்கையில் மேலும் 160 ஒமைக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஒமைக்ரோன் தொற்றாளர்களை கண்டறிவதற்காக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்ட 182 மாதிரிகள் தொடர்பான இறுதி அறிக்கை இன்றைய தினம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டதை அடுத்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 15 ஆயிரத்து 190 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 11 ஆயிரத்து 935 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments