வாழைச்சேனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பாலத்தின் கீழுள்ள ஆற்றில் தலை ஒன்று மிதந்து வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் சடலமொன்றின் தலை மிதந்ததாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாக வாழைச்சேனைகாவல் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.
ஓட்டமாவடிப் பாலத்தினால் நபரொருவர் சென்று கொண்டிருந்த போது ஆற்றில் சடலமொன்றின் தலை மிதந்த நிலையில் காணப்படுவதை கண்டுள்ளார். அவரே காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இந்நிலையில், கிரான் பகுதியில் ஆற்றில் காணாமல் போன மாணவர்ளின் சடலமா என்ற சந்தேகத்தில் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் குறித்த நபரின் தகவலுக்கமைய வாழைச்சேனை காவல்துறையின் உதவியுடன், கல்குடா சுழியோடிகள் இரண்டு படகுகளில் தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆற்றில் மிதந்தது சடலமா, அல்லது ஏதும் கழிவுப் பொருட்களா என காவல்துறை மற்றும் சுழியோடிகள் சந்தேகத்தோடு ஆற்றில் பல்வேறு பகுதிகளிலும் தேடிக் கொண்டிருப்பதை காண முடிவதுடன், இதனை கேள்வியுற்ற மக்கள் ஓட்டமாவடி பாலத்தில் குவிந்து காணப்படுவதை காணக்கூடியதாக உள்ளது.




0 Comments