யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்கரையில் அதிகமான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
நெடுந்தீவு கிழக்கு கடற்கரையில் நேற்று காலை தொடக்கம் இறந்த நிலையில் மீன்கள் கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த செயற்பாட்டுக்கு இந்திய இழுவைமடி மீன்பிடியினை மேற்கொள்ளும் மீனவர்களே இதற்கு காரணமாக இருக்க கூடும் என மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பில் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 comments: