கல்முனை ஹொலிபீல்ட் விளையாட்டுக் கழகத்தின் தலைவராக மீண்டும் எம்.எம்.ஜெஸ்மின் தெரிவு
அஸ்ஹர் இப்றாஹிம்
கல்முனை ஹொலிபீல்ட் விளையாட்டுக் கழகத்தின் 26 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நடப்பு வருட நிர்வாகிகள் தெரிவும் அங்கத்தவர் ஒன்று கூடலும் இன்று சம்மாந்துறை CPS கேட்போர் கூடத்தில் கழகத்தின் எம்.எம்.ஜெஸ்மீன் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு அம்பாறை மாவட்ட கிரிக்கட் சம்மேளனத்தின் தலைவர் இந்திக நளீன் ஜயவிக்ரம , செயலாளர் சிதத் லியனராய்ச்சி ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
கழகத்தின் நடப்பு வருடத்திற்கான தலைவராக எம்.எம்.ஜெஸ்மின் , செயலாளராக பேராசிரியர் கலாநிதி எஸ் எல்.றியாஸ், பொருளாளராக எம்.ஏச்.எம்.ஹனீப் உட்பட நிர்வாக சபை உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
0 Comments