Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கைக்கு சோறு வழங்கும் தந்தையாக உருவெடுத்த சீன அதிபர்

 


இலங்கையில் தற்போது சோறு வழங்கிய தந்தையாக சீனாவின் அரச தலைவர் ஷி ஜின்னை மக்கள் கூற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

கோட்டாபய ராஜபக்ச ஆட்சியிலேயே அதிகளவில் கடன் பெறப்பட்டுள்ளது. எனினும் தனது இரண்டாண்டு ஆட்சிக்காலத்தில் வெளிநாடுகளிடம் இருந்து கடனை பெறவில்லை என அரச தலைவர்  தனது சிம்மாசன உரையில் குறிப்பிட்டார்.

நாட்டின் மொத்த கடன் 21 ட்ரில்லியன் ரூபாய். இதில் 8 ட்ரில்லியன் ரூபாய் கடன் கோட்டாபயவின் ஆட்சிக்காலத்திலேயே பெறப்பட்டுள்ளது. 

திருடி சாப்பிடுவது, கடனுக்கு சாப்பிடுவது மற்றும் விற்று சாப்பிடுவதே அரசாங்கத்தின் கொள்கை எனவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments