Advertisement

Responsive Advertisement

சாய்ந்தமருது கோட்டத்திற்குட்பட்ட சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்தில் கல்வி பயிலும்


 ( அஸ்ஹர் இப்றாஹிம்))



சாய்ந்தமருது கோட்டத்திற்குட்பட்ட சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களிடையே கற்றல் மற்றும் இணைப்பாடவிதான திறனை விருத்தி செய்யும் வகையில் பல செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
பாடசாலை அதிபர் யு.எல்.நஸார் தலைமையில் இடம்பெற்றுவரும் மேற்படி நிகழ்வின் ஒரு அம்சமாக ஐந்தாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் செயற்பாடுகளிடையே திறமையை வெளிக்காட்டிய மற்றும் கோட்ட மட்டத்தில் இடம்பெற்ற போட்டிப் பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  அண்மையில் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கல்முனை கல்வி மாவட்ட பொறியியலாளர் ஏ.எம்.ஸாஹீர் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர்கள் , உதவி அதிபர்கள் , பகுதித்தலைவர்கள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் மற்றும் பெற்றோரும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments