Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியின் புதிய மாணவர்களின் அனுமதி தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்கு


 மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியின் 2022ம் கல்வியாண்டுக்கான புதிய மாணவர்களின் அனுமதி தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்கு தொழில் வழிகாட்டல் பிரிவின் ஏற்பாட்டில் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் சு.ராகுலநாயகி அவர்களின் ஆதரவில் சிறப்பாக 10.01.2022 அன்று நடைபெற்றது.


இந்நிகழ்வில் கிராமசேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வினை சிறப்பாக நடாத்துவதற்கு பிரதேச செயலக திறன்அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திரு.யு.செல்வரெத்தினம் மற்றும் திரு.சு.விவேகானந்தராசா ஆகியோர் தங்களது பூரண ஒத்துழைப்பினை வழங்கினர்.



Post a Comment

0 Comments