சிறுபோகம் முதல் விவசாயிகளுக்குத் தேவையான உரத்தை முறையாக வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று(10 ) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதற்கு தேவையான நடவடிக்கைகளை தற்போது முதல் மேற்கொள்ளுமாறும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.
தற்போது மேற்கொள்ளப்படும் பெரும் போகத்திற்கு அவசியமான உரம் இன்மையால் விவசாயிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இதேவேளை, நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் சுற்றுலாத்துறையைக் கட்டியெழுப்புவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள வெளிநாட்டுக் கையிருப்பு பற்றாக்குறையை ஈடு செய்வதற்கு சுற்றுலாத்துறை உதவியாக இருக்கும் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
0 comments: