( அஸ்ஹர்இப்றாஹிம்)
கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியிலிருந்து இம்முறை க.பொ.த.சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் அடைவு மட்டத்தினை அதிகரிக்கவும் , அம் மாணவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் நோக்கிலும் கல்லூரி அதிபர் எம்.ஐ.ஜாபிர் தலைமையில் பரிசளிப்பு நிகழ்வொன்று கடந்த வியாளக்கிழமை கல்லூரி இராசவாசல் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற்றது
கல்லூரியில் இடம்பெற்ற இரண்டாம் தவணை பரீட்சை முடிவுகளின் படி சிறந்த முடிவுகளைப் பெற்ற 23 மாணவர்கள் ( BATCH TOP STUDENTS )பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் பிரதி அதிபர்கள் , உதவி அதிபர்கள் ,பகுதித் தலைவர்கள் ,ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments: