Advertisement

Responsive Advertisement

( அஸ்ஹர் இப்றாஹிம் ) முசலி பிச்சைவாணிப நெடுங்குளம் (அளக்கட்டு) பகுதியில் சவுதி நாட்டு தனவந்தர்



( அஸ்ஹர் இப்றாஹிம்  )

முசலி பிச்சைவாணிப நெடுங்குளம் (அளக்கட்டு) பகுதியில் சவுதி நாட்டு தனவந்தர் ஒருவரின் நிதிப் பங்களிப்போடு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட உமர் இப்னு ஹத்தாப் ஜும்மா பள்ளிவாசல் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களினால் இன்று திறந்து வைக்கப்பட்டதுடன் ஜும்மா தொழுகையும் சிறப்பாக இடம்பெற்றது.  
குறித்த மஸ்ஜிதின் வளாகத்துக்குள் பாராளுமன்ற உறுப்பினரினால் பத்து இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பொது வசதிகள்  கூட  தொகுதியொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் உள்ளூர் அரசியல் பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள்,  கல்விமான்கள்,ஊர் ஜமாத்தினர் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments