Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தனக்கு நடந்த அவமானத்திற்கு பதிலடி கொடுத்தார் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

 


என்ன தடைகள் வந்தாலும், எவ்வளவு பசித்தாலும் சிங்கங்கள் புல்லை உண்பதில்லை என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்'' என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தரும் நாரஹேன்பிட்டி அபயராம விகாரையின் விகாராதிபதியுமான முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.


கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் குழு தேரரிடம் இருந்து பட்டச் சான்றிதழைப் பெற மறுப்பது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தன்னிடமிருந்து பட்டப்படிப்பு சான்றிதழை ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் அந்த பிள்ளைகளின் உரிமை. அதில் எந்த தவறும் இல்லை. எனக்பு எந்த பாதிப்பும் இல்லை என்றும் தேரர் கூறினார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா பல்கலை வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தலைமையில், கொழும்பு BMICH இல் கடந்த 17, 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் இடம்பெற்றிருந்த போது, சில மாணவர்கள் தேரரின் கைகளில் இருந்து பட்டத்தை பெற மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments