Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

முச்சக்கரவண்டிக் கட்டணம் சடுதியாக அதிகரிக்கும் சாத்தியய

 


பயணிகள் போக்குவரத்துக்கான முச்சக்கரவண்டிகளுக்காக பயணிகளிடமிருந்து அறவிடப்படும் பயணக் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒன்றிணைந்த முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் தொழில்துறை சங்கம் தெரிவிக்கின்றது.


நேற்றிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட நிலையிலேயே, முச்சக்கரவண்டி கட்டணங்களை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, முதலாவது கிலோமீற்றருக்காக அறவிடப்படும் கட்டணத்தை 30 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

50 ரூபாவாக காணப்பட்ட முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணம், 80 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

எனினும், இரண்டாவது கிலோமீற்றர் முதல் அறவிடப்படும் 45 ரூபா கட்டணத்தை அதிகரிக்கவில்லை என அந்த சங்கத்தின் செயலாளர் ரொஹண பெரேரா தெரிவிக்கின்றார்.

Post a Comment

0 Comments